இலங்கை – ஜப்பான் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் உயர்மட்ட சந்திப்பு!

ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர் நாயகமும் உதவி அமைச்சருமான யுகிகோ ஒகானோ (Ms. Yukiko Okano) 26.11.2026 அன்று வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்தார்.

இதன் போது, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

2027 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் விரிவான பங்காண்மையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை இதன்போது வலியுறுத்தினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects