கிழக்கு மாகாண அரச காணிகளைப் பாதுகாப்பது தொடர்பில் விசேட குழுக் கூட்டம் மட்டக்களப்பில்!

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளைப் பாதுகாத்தல் மற்றும் காணி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண காணிப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் 26.11.2026 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், காணி நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், அரச காணிகள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், ஆவணப்படுத்தல், முறையாகப் பேணிப் பாதுகாத்தல் மற்றும் காணி நிர்வாக நடவடிக்கைகளை சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக முன்னெடுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், காணி தொடர்பான சட்டங்கள், சட்டவிரோத காணி அபகரிப்புகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் மற்றும் அவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இக்குழுவானது கிழக்கு மாகாணத்தின் காணிப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இதன்போது வளவாளராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சேனக பள்ளியகுருகே, காணிப் பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணிப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி ரவீந்திரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரச துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects