மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் ஜி.பிரணவனின் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.11.2026 அன்று நடைபெற்றது.

இதன்போது சிறுவர்களைப் பாதுகாத்தல், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளைத் தடுத்தல், சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து வலையமைப்பின் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள், சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக சட்ட வைத்திய அதிகாரி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா றியாஸ் மற்றும் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் சு.பிரபாகர் ஆகியோர் செயற்பட்டனர்.

மேலும், சிறுவர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

சிறுவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளை வலுப்படுத்துவதிலும், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எவ்வாறு பதிலளிப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects