பொலிஸ் அதிகாரிகளின் திறன் மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவி செய்யும் சீனா!

இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவு வழங்கவுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் 24.11.2026 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களின் புதிய முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவ்வாறான குற்றங்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ள வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் திறன்களை மேம்படுத்துவதே இந்த உதவியின் நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பொலிஸ் நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட இலங்கைப் பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகளும் சீனத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects