வனவிலங்கு சேவையை வலுப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 9 புதிய கெப் ரக வாகனங்கள், குருநாகல் மாவட்டத்தின் 9 யானைக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
வாகனங்களைக் கையளிக்கும் நிகழ்வு 24.11.2026 அன்று வடமேல் மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, குருநாகல் மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட யானைக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளிடம் புதிய வாகனங்கள் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, வடமேல் மாகாண ஆளுநர், வடமேல் மாகாண வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் பிரசாந்த எல். விமலதாச, முதலாம் தர வனப் பாதுகாவலர் மனோஜ் வித்யாரத்ன, ஆளுநரின் செயலாளர் விஜய வனசிங்க, குருநாகல் பிரதேச சபைத் தலைவர் ஜகத் குணதிலக உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










