உலகப் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணியர் சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

உலகப் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணியர் சங்கத்தின் (WAGGGS) ஆசிய பசுபிக் பிராந்தியப் பிரதிநிதிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு 17.11.2026 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பில் பெண் வழிகாட்டி இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

பெண் பிள்ளைகளிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், குழுப்பணி, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதில் இவ்வியக்கம் ஆற்றும் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கைப் பெண் வழிகாட்டிகள் சங்கத்துடன் இணைந்து, இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்ற WAGGGS ஆசிய பசுபிக் பிராந்திய வளர்ச்சிப் பரிமாற்றச் செயலமர்வு 2026 தொடர்பிலும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலமர்வில் பங்களாதேஷ், இந்தியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்கள், சமமான வாய்ப்புகள், தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான தடைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது, பெண் பிள்ளைகள் தமது ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தி, சமூகத்திற்கு ஆக்கபூர்வமாகப் பங்களிப்புச் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெண் பிள்ளைகள் மற்றும் இளம் பெண்களை வலுவூட்டுவதில் WAGGGS அமைப்பின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இலங்கைப் பெண் வழிகாட்டிகள் சங்கத்துடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் ஊக்குவித்துள்ளார்.

இந் நிகழ்வில் பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்தவும் கலந்துகொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects