ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்த இலங்கை வந்துள்ள அமெரிக்க தன்னார்வத் தொண்டர்கள்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுவினர் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு நடைபெற்ற சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், 17.11.2026 அன்று வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயரும், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

2018ஆம் ஆண்டு இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள மிகப்பெரிய அமெரிக்க அமைதிப் படை தன்னார்வத் தொண்டர் குழு இதுவாகும்.

இந்தத் தன்னார்வத் தொண்டர்கள் இலங்கை ஆசிரியர்களுடன் இணைந்து வகுப்பறைக் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் ஊடாக மாணவர்களின் ஆங்கில மொழித் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்துவதற்குப் பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ,

கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையிலான உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை என வலியுறுத்தினார்.

“இராஜதந்திர உறவுகள் எப்போதும் பேச்சுவார்த்தை மேசையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் அவை வகுப்பறை மேசையிலிருந்தும் ஆரம்பிக்கலாம்.”

அத்துடன், இலங்கைக்கான அமைதிப் படைத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெஃப்ரி கோவியா உள்ளிட்ட குழுவினர் இந்தப் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பையும் பிரதி அமைச்சர் பாராட்டினார்.

இத்திட்டமானது இலங்கைக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்குப் பெறுமதியான பங்களிப்பை வழங்கும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects