79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழா தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல்!

79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழா தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 18.11.2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இம்முறை சுதந்திர தின விழாவின் தொனிப்பொருள், ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரல், சமய நிகழ்வுகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் அமைச்சர்களான ஹினிதும சுனில் செனெவி, வசந்த சமரசிங்க, சந்தன அபேரத்ன, சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரும், நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, வலுசக்தி அமைச்சு, மேல் மாகாண சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects