2026 ஆம் ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் (உள்நாட்டு மொழிகள்) பரீட்சையை இம் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு 10, ஆனந்தா கல்லூரியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் நேர அட்டவணையை www.moj.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
2026.08.31 ஆம் திகதி வரை சிங்களம் / ஆங்கிலம் மற்றும் சிங்களம் / தமிழ் ஆகிய பாடங்களுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்காக இந்தப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









