மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிப் பட்டறை!

மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவப் பண்புகள், குழு ஒத்துழைப்பு, தொடர்பாடல் மற்றும் தீர்மானம் எடுக்கும் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலான பயிற்சிப் பட்டறை 18.11.2026 அன்று புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஆலோசனைக்கு அமைவாகவும், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையிலும் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது குழுச் செயற்பாடுகள், நடைமுறைப் பயிற்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் ஊடாக தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்தும் பல்வேறு பயிற்சி அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக, குழுப்பணி, பொறுப்புப் பகிர்வு, தலைமைத்துவத்தின் அடிப்படைகள், தலைவர் மற்றும் முகாமையாளர் ஆகியோரின் பண்புகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், தொடர்பாடல், செவிமடுத்தல் மற்றும் குழுவினரிடையே நம்பிக்கையை வளர்த்தல் தொடர்பான செயற்பாட்டுப் பயிற்சிகளும் இடம்பெற்றன.

இப்பயிற்சிப் பட்டறையில் வளவாளராகக் கலந்துகொண்ட உளவள ஆலோசகர் எஸ். ஸ்ரீதரன், உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவ ஆற்றல், குழுவாகச் செயற்படும் திறன், திறமையான தொடர்பாடல் மற்றும் சவாலான சூழ்நிலைகளில் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects