கிழக்கு மாகாண பொதுச் சேவைக்கு 64 புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்!

கிழக்கு மாகாண அரச சேவைக்காக போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் 17.11.2026 அன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பின்வரும் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் (மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில்) – 49

தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (திறந்த அடிப்படையில்) – 06

சாரதிகள் – 09

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் – 02

திறந்த அடிப்படையில் – 07

இதற்கமைய, கிழக்கு மாகாண அரச சேவையின் வினைத்திறனையும், பொதுமக்களுக்கான சேவை வழங்கலின் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் புதிதாக 64 அதிகாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects