மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 61 பயனாளிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு நஷ்டஈட்டுக் காசோலைகளை வழங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு காட்டு யானைகளின் தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், வீடுகள், தனியார் சொத்துக்கள் மற்றும் அரச பொதுச் சொத்துக்களுக்கான சேதங்களுக்கு 37 மில்லியன் ரூபாவும், விவசாய நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 21 மில்லியன் ரூபாவும் என மொத்தமாக 58 மில்லியன் ரூபாய் பெறுமதியான நஷ்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்ள வந்த பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









