சாரதிகள் மது போதையில் வாகனம் செலுத்துவதை தடுப்பதற்கான கருவியை கண்டுபிடித்த பதுளை பாரதி மகா வித்தியாலய மாணவன்!

உயர் தரத்தில் பயிலும் மாணவனான எஸ் தினிப்ஷான், சாரதிகள் மது போதையில் வாகனம் செலுத்துவதை தடுப்பதற்கான புதிய NEXA தொழில்நுட்பத்தினை  கண்டுபிடித்துள்ளார்.

பதுளை பாரதி மகா வித்தியாலயத்தில் 13 ஆம் தர வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் குறித்த மாணவன் 2026 ஆம் ஆண்டுக்கான வணிக மற்றும் முயற்சியாண்மை திறன் மதிப்பீட்டு போட்டியில் இந்த புதிய கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார்.

வீதி விபத்துக்களைக் குறைத்து சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் NEXA எனும் நவீன Smart Alcohol Detection and Vehicle Safety System உருவாக்கப்பட்டுள்ளது.

ESP32 அல்லது ESP8266 மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் Alcohol Sensor மூலம் இயங்கும் இவ்வமைப்பு, சாரதியின் சுவாசத்தில் உள்ள மதுசாரத்தின் அளவைக் கண்டறிந்து தகவல்களை Android செயலிக்கு அனுப்புகிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக உருவாக்கப்பட்டுள்ள Android Software  மூலம் மதுசாரத்தின் அளவை நேரடியாகக் கண்காணிக்க முடியும்.

குறிப்பாக, கண்டறியப்பட்ட மதுசாரத்தின் அளவை செயலியில் காண்பிப்பதுடன், ஆபத்தான அளவு கண்டறியப்படும்போது உடனடி எச்சரிக்கையையும் வழங்குகின்றது.

மேலும், குறுந்தகவல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

சாதாரண நிலை பச்சை நிறத்திலும், ஆபத்தான நிலை சிவப்பு நிறத்திலும் காட்டப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த போட்டியில்  தேசிய மட்டத்தில்  எஸ் தினிப்ஷான் மூன்றாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects