இலங்கையின் 8 அரச சேவைகளில் 974 வெற்றிடங்களுக்கு திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!

இலங்கையின் எட்டு அரச சேவைகளில் நிலவும் மூன்றாம் தர வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இம் மாதம் 13 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை நிர்வாக சேவை, இலங்கை விவசாய சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை பொறியியலாளர் சேவை, இலங்கை கட்டடக் கலைஞர் சேவை மற்றும் இலங்கை விஞ்ஞான சேவை ஆகியவற்றில் மொத்தம் 974 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை 2026 நவம்பர் 16 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 2026 டிசம்பர் 11ஆம் திகதி காலை 9.00 மணி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.

பரீட்சை 2027 பெப்ரவரி மாதத்தில் அனைத்து மாகாணங்களின் பிரதான நகரங்களிலும் நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் ‘Our Services’ பிரிவின் கீழ் காணப்படும் ‘Application for the Common Recruitment Examination’ ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இணையவழியாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒவ்வொரு சேவைக்கும் விண்ணப்பிப்பதற்கான கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் தொடர்பான விரிவான விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பார்வையிட முடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects