2026 ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் 192.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2026 செப்டெம்பர் மாதத்தில் பதிவான 185.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 3.8 சதவீத அதிகரிப்பாகும்.
அதேவேளை, 2025 ஒக்டோபர் மாதத்தில் பதிவான 186.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீத அதிகரிப்பையும் இது பதிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், 2026 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான முதல் 10 மாதங்களில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 2,437.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 8.3 சதவீத வீழ்ச்சியாகும்.
இதன்படி, ஒக்டோபர் மாத சுற்றுலா வருமானம் மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் அதிகரித்திருந்தாலும், 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் குறைந்த மட்டத்திலேயே உள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








