மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு – அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365 மற்றும் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் பாதிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365 மற்றும் டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் தாக்கமாக, ஓபன் ஏ.ஐ. மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் சில செயற்கை நுண்ணறிவு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நேரப்படி 12.11.2026 அன்று பிற்பகல் முதல், மைக்ரோசாப்ட் சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அவுட்லுக் சேவை முடக்கம் தொடர்பாக ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.

மைக்ரோசாப்ட் 365 மற்றும் டீம்ஸ் சேவைகள் செயலிழந்ததால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தகவல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், மைக்ரோசாப்ட் இணைப்புச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பினால், ஓபன் ஏ.ஐ. மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் சில சேவைகளும் முடங்கின.

மின்னஞ்சல், நாட்காட்டி மற்றும் தேடல் வசதிகள் செயல்படவில்லை என ஆந்த்ரோபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகப்படியான பயன்பாடு காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சில சர்வர்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததால், ஏனைய சர்வர்களில் அழுத்தம் அதிகரித்து இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, புதிய மென்பொருள் மாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சர்வர்களை மீளச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சர்வர்களைச் சீரமைக்கும் பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட சேவைகளும் மீண்டும் வழமைக்குத் திரும்பி வருவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects