இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான பண்ட வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது

உள்நாட்டு சீனித் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கும் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கும் இடையில் நிலவும் வரி முரண்பாடுகளைக் குறைத்து, இரு தரப்பினருக்கும் சமமான போட்டி வாய்ப்புகளையும் நியாயமான போட்டிச் சூழலையும் ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மிகவும் நடுநிலையான மற்றும் சமனான வரித் திட்டமொன்றை உறுதிப்படுத்தும் பொருட்டு, இறக்குமதி செய்யப்படும் சீனியின் மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects