லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் குறித்து வெளியான அறிவித்தல்!

சமீபத்திய விநியோகத் தடையைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, 3,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் 12.11.2026 அன்று அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயு இறக்கப்பட்டதும், எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி, அவற்றை தங்களது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விநியோகங்கள் உள்ளூர் விற்பனை நிலையங்களைச் சென்றடைவதால், சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு படிப்படியாகக் குறைந்து கிடைக்கும் தன்மை மேம்படும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமங்களால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு லாஃப்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்ததுடன், அவர்களின் பொறுமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்பு, தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு முகவரிடம் இருப்பு உள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு அல்லது நிறுவனத்தின் 1345 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects