கிராமிய தொழில்முயற்சியாளர்களுக்கு ரூ. 5 மில்லியன் வரை சமூர்த்தி வங்கிக் கடன் – அஸ்வெசும பயனாளிகளுக்கும் வாய்ப்பு

கிராமிய தொழில்முயற்சிகளை வலுவூட்டுவதற்கும் அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, தொழில்முயற்சியாளர்களுக்கு சமூர்த்தி வங்கி ஊடாக உயர்ந்த பட்சம் ரூ. 5 மில்லியன் வரை கடன் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த கடனை 4% வருடாந்த வட்டி வீதத்தின் கீழ் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்குத் தகைமை பெறுவதற்கு குறித்த தொழில் முயற்சியாளர்கள் குறைந்தபட்சம் 5 அஸ்வெசும பயனாளிகளுக்கேனும் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தல் கட்டாயமாகும்.

இதற்காக வட்டி நிவாரணத்திற்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதன் மூலம் 5,000 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects