மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி, தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025/2026 இன் உயர்தரப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் உயர்தரப் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற ஒரேயொரு பாடசாலையாகவும், கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்ற ஒரேயொரு அரச நிறுவனமாகவும் புனித மைக்கேல் கல்லூரி திகழ்கின்றது.
குறிப்பாக, தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்ற கல்லூரி, தனது முதல் முயற்சியிலேயே தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சாதனையானது கல்லூரியின் கல்வி வரலாற்றில் மற்றுமொரு பெருமைமிகு மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கல்லூரிச் சமூகத்தின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இந்த வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் கல்லூரி அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். அனைவரினதும் அர்ப்பணிப்பு, ஒற்றுமை, கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பே இத்தேசிய வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வெற்றியைத் தொடர்ந்து அதே ஒற்றுமையுடனும் உறுதியுடனும் செயற்பட்டு கல்லூரியை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








