கடுகன்னாவ – கனேதென்ன வீதியில் ஒரு வழிப்பாதை போக்குவரத்திற்காக திறந்து வைக்க தீர்மானம்!

கொழும்பு – கண்டி வீதியின் கடுகன்னாவ – கனேதென்னக்கு இடையிலான வீதிப்பகுதியில் போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதையை மட்டும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

பாறைகள் மற்றும் மண்மேடு சரிவு ஆபத்து நிலைமைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளுக்கு பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மழை பெய்யும் பட்சத்தில் இரவு வேளையில் வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கூறினார்.

எவ்வாறாயினும், முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொள்வதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects