நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 25 விதாதா வள நிலையங்கள் சிறு உற்பத்தி நிலையங்களாகத் தரமுயர்த்தப்படவுள்ளன – விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோரை வலுவூட்டும் நோக்கில் சிறு உற்பத்தி நிலையங்களின் வலையமைப்பை (Mini Incubation Center Network) அமைக்கும் விசேட வேலைத்திட்டத்தை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு 04.11.2026 அன்று மீரிகம பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ‘விதாதா’ வள நிலையத்தில் (Vidatha Resource Centre), விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

போதிய வளங்கள் மற்றும் முறையான உட்கட்டமைப்பு வசதிகளின்றி தமது தொழில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோருக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்நுட்ப வசதிகளையும் ஆதரவையும் வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 25 ‘விதாதா’ வள நிலையங்கள் சிறு உற்பத்தி நிலையங்களாகத் தரமுயர்த்தப்படவுள்ளன.

இதன் மூலம் சுமார் 2,500 தொழில்முனைவோர் நேரடிப் பலன்களைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2026 ஆம் ஆண்டுக்காக இந்நடவடிக்கைக்கு 100.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீரிகமவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது நிலையத்தின் மூலம் குறிப்பாக உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்குச் சுகாதாரமான முறையில் உணவுகளைத் தயாரித்தல், பொதியிடல் மற்றும் லேபள் இடுதல் ஆகியவற்றுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு வழிவகுக்கும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects