இலங்கையின் விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக IFAD இன் ஆதரவைப் பெறுவது குறித்த கலந்துரையாடல்!

2028–2030 காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்தின் (IFAD) ஆதரவை ப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் 03.11.2026 அன்று ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய துறைகள் குறித்தும், சிறிய அளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதில், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சமூக சக்தி” வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதியின் செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.

மேலும், 2028–2030 காலப்பகுதியில் இலங்கையின் அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்ப IFAD இன் ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கத்தின் முன்னுரிமைகளைக் கண்டறிவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கும் IFAD க்கும் இடையிலான ஒருங்கிணைப்பினை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் செயற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்துவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா, IFAD இன் உள்நாட்டுப் பிரதிநிதி Sherina Tabassum மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த போதி வன்னியாரச்சி, ஜானக அமரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects