புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு இணையாக, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பாகக் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 ஆம் மற்றும் 7 ஆம் தரங்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2029 ஆம் ஆண்டில் 4, 8 மற்றும் 10 ஆம் தரங்களுக்கும், 2030 ஆம் ஆண்டில் 5, 9 மற்றும் 11 ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
உயர்நிலை இரண்டாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2031 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன், அப்பாடத்திட்டத்தைக் கற்கும் மாணவர்கள் முதன்முறையாக 2033 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது சில தரங்களுக்கு, அதாவது 2027 ஆம் ஆண்டில் 3, 4 மற்றும் 5 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 4 மற்றும் 5 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 5 ஆம் தரத்திற்கும் பழைய பாடத்திட்டமே நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும்போது, அந்தந்த ஆண்டுகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கருத்திற் கொண்டு பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








