இலங்கையின் கறுவா கைத்தொழில் மூலம் 100 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் இலக்கு!

இலங்கையின் கறுவா கைத்தொழில் மூலம் 2026 ஆகஸ்ட் 30ஆம் திகதி வரையில் 185 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 பில்லியன் ரூபாய்) வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் கறுவா கைத்தொழில் மூலம் 100 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்காக, விவசாய அமைச்சின் ஊடாக கறுவா அபிவிருத்தித் திணைக்களத்திற்கு 365 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம், பாரம்பரியமாக கறுவா பயிரிடப்படாத பகுதிகளில் புதிதாக 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் கறுவா பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கும், பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவா உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கறுவா கைத்தொழிலுக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கும், இத்துறையில் தொழில்முனைவோரை உருவாக்கி ஊக்குவிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கையின் கறுவா கைத்தொழிலை மேலும் மேம்படுத்தி, 2026ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கை அடைவதே இந்தத் திட்டங்களின் பிரதான நோக்கம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects