ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் (ABU) 63 ஆவது மாநாட்டின் தொடக்க விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் 01.11.2026 அன்று கொழும்பில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள 66 நாடுகளைச் சேர்ந்த 225 ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பிராந்திய ஊடகத் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி, விளையாட்டு ஒளிபரப்பு, ஊடக உள்ளடக்கங்கள் ஆகியவை தொடர்பாகவும், செயற்கை நுண்ணறிவை (AI) ஊடகத் துறையில் பயன்படுத்துதல் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட தற்போதைய ஊடகத் துறையின் சவால்கள் குறித்தும் இம்மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இம்மாநாட்டிற்கு இணையாக, ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தொழில்நுட்ப மற்றும் நிபுணர் குழு அமர்வுகளும் நடைபெற்றன.
மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டமைக்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டடது.
இந் நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டுத் தூதுவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் மற்றும் ஊடகத் துறை சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









