சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்!

2030 ஆம் ஆண்டளவில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானத்தைப் பெறுதல் மற்றும் இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 05 மில்லியன்களாக அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைவது தொடர்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் சுற்றுலாத் துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, 28.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, திருகோணமலை, மட்டக்களப்பு, சீகிரியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி உள்நாட்டு விமான சேவை வசதிகளை மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், 10 புதிய சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டில் இலங்கையுடன் விமானப் போக்குவரத்து சேவைகளைத் தொடங்கியுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டதுடன், அந்த எண்ணிக்கையை 50 வரை அதிகரித்துக் கொள்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள வனப்பூங்காக்களைச் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் மற்றும் விதிகளை கொண்டுவருவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உலகளாவிய பிரபல்யப்படுத்தல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை முறைமைப்படுத்தும் நோக்கில், அனைத்து சுற்றுலா ஹோட்டல்களையும் விடுதிகளையும் சுற்றுலாச் சபையில் பதிவு செய்து, உரிய சட்டக் கட்டமைப்பிற்கு உட்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், உரிய சட்ட முறைமைகளுக்கு முரணாக வெளிநாட்டினரால் இலங்கையில் நடத்தப்படும் வர்த்தகங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்களையும் விதிகளையும் கொண்டுவருவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் அசோக ஹெட்டிகொட, விடுதிகள் சங்க உப தலைவர் எக்சத் விஜேரத்ன, பிரதித் தலைவர் (பொது) திமித்ரி குரே, சிரேஷ்ட முகாமைத்துவக் குழு உறுப்பினர் சாமின் விக்ரமசிங்க, பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த பெர்னாண்டோ மற்றும் இலங்கை உள்நாட்டு சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் பொபி ஜோர்டன் ஹென்சன் (Bobby Jordan Hansen) ஆகியோருடன் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்காக ஸ்தாபிக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects