குறும்படத் துறையில் 2026ஆம் ஆண்டுக்கான அரச இளம் கலைஞர் விருதை வென்ற கீர்த்திசீலன் கிஷாந்!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் விருது வழங்கல் நிகழ்வானது 28.10.2026 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

அதற்கமைய, இவ்வருடம் இளங்கலைஞர் விருதுக்கு 17 கலைஞர்களும், வித்தகர் விருதுக்கு 13 கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பரிசுக்குரிய நூல்களாக 11 நூல்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் 2026ஆம் ஆண்டிற்கான அரச இளம் கலைஞர் விருதைக் குறும்படத் துறையில் கீர்த்திசீலன் கிஷாந் பெற்றுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்புத் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் கடந்த 13 ஆண்டுகளாகப் பங்களித்து வரும் திரைப்பட இயக்குநர் கீர்த்திசீலன் கிஷாந்த் இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசையமைப்பு, ஒலிப்பதிவு, ஒலி விளைவுகள், நடிப்பு மற்றும் கலை இயக்கம் எனச் சினிமாவின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ள இவர், ஒரு பன்முகத் திரைப்படக் கலைஞராக உருவாகியுள்ளார்.

இதன்படி வித்தகர் விருது, இளங்கலைஞர் விருது, பாடல் போட்டிகளுக்கான விருது, கலை இலக்கிய அறிவுப் போட்டிகளில் வெற்றிபெறும் கலை மன்றங்களுக்கான விருது மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கப் போட்டி விருதுகள் என்பன வழங்கப்படுகின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects