இலங்கை – துருக்கி விமானப் போக்குவரத்து உடன்படிக்கையைத் திருத்துவதற்கான நெறிமுறை கைச்சாத்து!

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து உடன்படிக்கையைத் திருத்துவதற்கான நெறிமுறையில் இரு நாடுகளின் பிரதியமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர மற்றும் துருக்கியின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் என்வர் இஸ்குர்ட் ஆகியோர் 27.10.2026 அன்று இந்த திருத்தப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர திங்கட்கிழமை (26) முதல் இன்று புதன்கிழமை (28) வரை துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, துருக்கியின் வெளிவிவகார பிரதி அமைச்சர் பெர்ரிஸ் எகின்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பான பிரதியமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

விமானப் போக்குவரத்து உடன்படிக்கையைத் திருத்துவதற்கான நெறிமுறையில் கைச்சாத்திட்டமை, இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும் முக்கியமான முன்னேற்றமாகும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களையும் நெருக்கமாக இணைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதில் துருக்கி அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதி அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையில் வலுவானதும் பயனுள்ளதுமான கூட்டாண்மையைக் கட்டியெழுப்புவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த உடன்படிக்கை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects