இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட அண்மைய புள்ளிவிவரங்களின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் இலங்கை 1,36,096 சர்வதேச சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது.
இம்மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 38 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியாவில் இருந்து 51,424 சுற்றுலாப் பயணிகள் வருகைகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் இதன்வாயிலாக இலங்கைக்கான சுற்றுலாச் சந்தையில் இந்தியாவே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இரண்டாவது பெரிய மூலச் சந்தையாக பிரித்தானியா திகழ்கிறது, அந்நாட்டிலிருந்து 10,117 சுற்றுலா பயணிகளின் வருகைகள் பதிவாகியுள்ளன.
சீனா 9,411 சுற்றுலா பயணிகளின் வருகைகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அவுஸ்திரேலியாவிலிருந்து 6,844 சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் ஜேர்மனியிலிருந்து 6,269 சுற்றுலா பயணிகளின் வருகைகள் ஆகியவை முறையே முதல் ஐந்து பட்டியலில் அடங்குகின்றன.
ஒக்டோபர் மாத புள்ளிவிவரங்களுடன், 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,829,772 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .
ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 488,838 சுற்றுலா பயணிகளின் வருகைகளுடன் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பாளராகத் தொடர்ந்து நீடிக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரித்தானியா 170,844 சுற்றுலா பயணிகளின் வருகைகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும் சீனா 121,961 சுற்றுலா பயணிகளின் வருகைகளையும், ஜேர்மனி 103,547 சுற்றுலா பயணிகளின் வருகைகளையும், ஆஸ்திரேலியா 93,833 சுற்றுலா பயணிகளின் வருகைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







