2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க விசேட வகைப் பிணக்குகள் மத்தியஸ்த சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான 6 நாள் விசேட பயிற்சி நெறி மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப் பயிற்சித் திட்டம், அக்டோபர் 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
காணி உரிமை மற்றும் உடமை தொடர்பான பிணக்குகளைக் கையாள்வதற்கான நடைமுறை மத்தியஸ்த நுட்பங்கள், முரண்பாட்டுப் பகுப்பாய்வு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் மத்தியஸ்தர்கள் அறிந்திருக்க வேண்டிய விசேட தந்திரோபாயங்கள் குறித்து இப்பயிற்சியின் மூலம் பயிலுநர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகின்றது.
இந் நிகழ்வின் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம்.ஆசாத் வவுனியா மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் எஸ்.விமலராஜா மேற்கொண்டனர்.
காணி மத்தியஸ்தராகத் தகைமை பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இப்பயிலுநர்கள் 6 நாட்களிலும் முழுமையாகக் கலந்து கொள்வதுடன், இறுதி நாளில் நடாத்தப்படும் பரீட்சையிலும் தோற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









