சிறைக்கைதிகள் நலன்புரி தாய் சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வியஜம் ஒன்றை 22-10-2026 அன்று மேற்றக்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயத்தில் அந்த சங்கத்தின் தலைவி சறோஜினி வீரவர்த்தன, செயலாளர் குசும் சந்திரநாயக்க, பொருளார் காஞ்சனா லீலாரத்ன, சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க புணர்வாழ்வு அத்தியட்சகர் ஜயந்த அழகசூரிய, உட்பட ஏனைய பல்வேறு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ரங்கன பெரேராவின் வழிகாட்டலில், மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க தலைவர் சடாட்சரராஜா தலைமையில் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கமும், சிறைச்சாலை நிர்வாகமும் இணைந்து அவர்களை வரவேற்றதுடன், மட்டக்களப்பு சங்கத்தினால் கடந்த காலங்களில் செயற்படுத்திய செயற்றிட்டங்கள் தொடர்பாக காணொளி வடிவில் விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மேம்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அதனைத்தொடர்ந்து சிறைக்கைதிகள் நலன்புரி தாய் சங்கத்தின் பிரதிநிதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர், பிரதம ஜெயிலர் மோகன்ராஜ் மற்றும் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க அஙகத்தவர்கள் இணைந்து சிறைக்கைதிகளைப் பார்வையிட்டதுடன், அவர்களின் நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் உறுப்பினர்களும், மாவட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், கலந்துகொண்டனர்
தொடர்ந்து அவர்கள் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















![]()










