ஜனாதிபதி செயலகத்தின் Vision வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்ட நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள்!

வகுப்பறைக்கு அப்பால் சென்ற கல்விசார் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதுடன், நாட்டின் வரலாறு, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரச நிர்வாகச் செயற்பாடு என்பன பற்றிய பிரயோக ரீதியான புரிதலை வழங்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘Vision’ கல்வி வேலைத்திட்டத்தில் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 22.10.2026 அன்று இணைந்து கொண்டனர்.

இதன்படி, மத்துகம அதலே மகா வித்தியாலயம், களுத்துறை வேலாபுர நவோதய மகா வித்தியாலயம், அரநாயக்க ரிவிசந்த மத்திய வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை, சாய்ந்தமருது சம்ஸ் மகா வித்தியாலயம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாணவ மாணவிகள் இந்த வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வாழ்க்கையின் இலக்குகளை வெற்றிகொள்வதற்காக உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார். அத்துடன், சவால்களை எதிர்கொண்டு தளராது முன்னோக்கிச் செல்வதற்கும், தமது பொறுப்புகள் பற்றிய முறையான புரிதலுடன் செயற்படுவதற்கும் மாணவர்கள் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி நிதியத்தின் பங்களிப்பு மற்றும் மக்கள் நலனுக்காக அந்த நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சேவைகள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மாணவ மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

இவ்வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலைகளுக்கு நினைவுப்பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects