மட்டக்களப்பு மாவட்ட வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கனச் சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சாதனையாளர் பாராட்டு நிகழ்வு – 2026 வும் 03.09.2026 அன்று கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபலமாக அறியப்பட்ட குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப்பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் குழந்தைவேல் கோடிஸ்வரன் “திரைக்கலைத் தீபம்” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கனச் சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் க. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான பொ.தனேஸ்வரன் கலந்துகொண்டார்.
இதன்போது பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குழந்தைவேல் கோடிஸ்வரனின் கலை மற்றும் குறுந்திரைத்துறைப் பங்களிப்புகளைப் பாராட்டி, கடந்த 31.07.2021 அன்று LIFT நிறுவனத்தினால் “குறுந்திரைச் செம்மல்” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







