பேராதனை கறுப்புப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நிறைவு – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

பேராதனை கறுப்புப் பாலத்தின் புனரமைப்புப் பணிகளை அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நிறைவு செய்ய முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

கடிகமுவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் புகையிரத போக்குவரத்துக்குத் தடங்கல் ஏற்பட்டதாகவும், எனினும் சேவைகள் விரைவாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதி புகையிரதம் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பேராதனை கறுப்புப் பாலத்தின் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நிறைவு செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு கண்டி நகருக்கு மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects