வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் கையளிப்பு!

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நான்கு சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கையாகத் தையல் இயந்திரங்கள் 16.10.2026 அன்று சமுர்த்தி மகாசங்க வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

2025ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 206, 206D, 206C, 208A ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த நான்கு பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு (75000/- ) ரூபா எழுபத்தையாயிரம் பங்களிப்பின் மூலம் தையல் இயந்திரங்கள் சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டன.

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எம்.சரீப், வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், கோறளைப்பற்று மத்தி பிரிவிற்கான க்ளீன் சிறிலங்கா இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.சமீம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects