லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று (19.10.2026) மாலை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், எரிவாயுவைச் சுமந்து வந்த ‘FRANCOIS’ என்ற கப்பல் 3,900 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது அந்த எரிவாயுக்சிலிண்டர்கைளை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக நாட்டிற்குச் சீரான முறையில் எரிவாயு வரவழைக்கப்படுவதால், சந்தைக்குத் தடையில்லாமலும் தாராளமாகவும் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விநியோக நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3,50,000 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் 18.10.2026 அன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








