மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (19.10.2026) காலை 11.30 க்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, நாளை (20.10.2026) அதிகாலை ஒரு மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தஞ்சம் அடையவும்.

நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்ப்பரப்புகள் போன்ற திறந்தவெளிகளில் இருப்பதை தவிர்க்கவும்.

மின் இணைப்புகளுடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சைக்கிள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சாய்ந்து விழும் மின் கம்பிகள் மற்றும் மரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர உதவிகள் அல்லது அவசர காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects