அபேக்ஷா வைத்தியசாலையின் சேவைகளை மேலும் வலுப்படுத்த முகாமைத்துவ குழு கூட்டம்!

நாட்டின் முன்னணி புற்றுநோய் சிகிச்சை மத்திய நிலையமான மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தற்போதைய செயற்பாடுகள், நோயாளர் சிகிச்சை சேவைகளின் தரத்தை அதிகரித்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விசேட வைத்தியசாலையின் முகாமைத்துவ குழு கூட்டம் (Hospital Management Committed Meeting) அண்மையில் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அரசாங்க வைத்தியசாலைகளில் நிருவாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், வினைத்திறனை அதிகரித்தல் மற்றும் நோயாளர் சிகிச்சை சேவைகளை விருத்தி செய்வதற்காக வைத்தியசாலை மட்டத்தில் இந்த வைத்தியசாலையின் முகாமைத்துவக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒழுங்கு முறையான திட்டமிட்ட வேலைத் திட்டம் ஒன்றுக்கு ஊடாக தொடர்ச்சியாக வழங்கப்படும் புற்றுநோய் சிகிச்சை சேவைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதே மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த முகாமைத்துவ குழு கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects