மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகத் தெரிவித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (12) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தலானது நாளை (13) அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects