பதுளையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாட்டின் 2ஆவது செவ்விளநீர் கிராமம்!

பெருந்தோட்டப் பயிர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 250 செவ்விளநீர் கிராமங்களை நிறுவும் தேசிய திட்டத்தின் கீழ், நாட்டின் இரண்டாவது செவ்விளநீர் கிராமத்தை நிறுவும் பணிகள் அண்மையில் பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்த, தெஹிகம பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத் தேசிய திட்டத்தின் முதற்கட்டம் கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு அமைவாகவே பதுளையில் இந்த இரண்டாவது கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது செவ்விளநீர் பயிர்ச்செய்கையாளர்களுக்கு 500 செவ்விளநீர் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், வறுமை ஒழிப்புக்கான ‘பிரஜா சக்தி’ திட்டத்துடன் இணைந்து, வீட்டுத் தோட்டத் தென்னை பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு 500 தென்னங் கன்றுகளும் வழங்கப்பட்டன.

மேலும், தென்னை காணி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் வருடாந்த செவ்விளநீர் விளைச்சலை 25 மில்லியனால் அதிகரிப்பதும், செவ்விளநீர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானத்தை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக கூட்டுவதுமே இத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இதற்காக 2026 முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் புதிய செவ்விளநீர் பயிர்ச்செய்கை விரிவாக்கத்திற்காக 2,12,500 புதிய கன்றுகளை நாட்டுவதற்கும், தற்போதுள்ள பயிர்ச்செய்கைகளில் 2,21,500 மரங்களை புனரமைப்பதற்கும் அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய பயிர்ச்செய்கை நிலங்களை விரிவுபடுத்துவதுடன், நிலவும் மரங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் செவ்விளநீர் உற்பத்தியின் அளவையும் தரத்தையும் உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வறட்சி காலங்களில் பயிர்களைப் பாதுகாத்து நிலையான மற்றும் தரமான விளைச்சலைப் பெற 500 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய நீர் பாசன அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்விளநீர் பயிரிடுதல் முதல் அறுவடை, போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வரையிலான முழுமையான உற்பத்தி சங்கிலியையும் பயனுள்ள வகையில் நிர்வகிப்பதற்காக பயிர்ச்செய்கையாளர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைக்கும் புதிய முறையான தரவுத்தளம் ஒன்றும் இதன் கீழ் உருவாக்கப்படவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects