2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உயர்ஸ்தானிகரான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாளி தமிழரான நவநீதம் பிள்ளைக்கு (Navanethem “Navi” Pillay) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை மேம்படுத்துவதற்கும் சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரெய்ட்னஸ் (Jørgen Watne Frydnes) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உயர்ஸ்தானிகராகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகவும் பணியாற்றிய நவநீதம் பிள்ளை, உலகளவில் மனித உரிமைப் பாதுகாப்பிலும் சர்வதேச நீதித்துறையிலும் முன்னணிப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில், போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் முதன்முதலில் குரல் கொடுத்த பிரதான நபர்களில்  ஒருவராக அறியப்படுகிறார்.

அவரது காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, 2014 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசேட விசாரணைக்குழு (OISL) அமைக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், வடக்கு-கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைத்தல், காணிகளை மீளளித்தல், ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கை அரசு சர்வதேசத் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தங்களை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects