மட்டக்களப்பு ஹெரிடேஜ் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் முருக்கன்தீவு சிவசக்தி வித்தியாலய மாணவர்களுக்கான உலக சிறுவர் தின நிகழ்வு இன்று (09.10.2026) கொண்டாடப்பட்டது.
இதன் போது, மகிழ்ச்சியும் படைப்பாற்றலும் சமூக ஒருமைப்பாடும் நிறைந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நாடகங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தினர்.
அத்துடன் ஆசிரியர்களின் நடனம் மற்றும் பாடல் கலைநிகழ்ச்சிகள் நிகழ்விற்கு மேலும் வர்ணமும் உற்சாகமும் சேர்த்தன.
இந் நிகழ்வுகள் மாணவர்களின் கல்வி மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தின.
சிறுவர்களை கௌரவிக்கும் வகையில், ரோட்டரி கழகத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சிற்றுண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சிறப்பம்சமாக குறித்த பாடசாலையில் முதன்முறையாக 05ம் தர புலைமைப்பரில் பரீட்சையில் ஒரு மானவி சித்திபெற்றுள்ளார் அவரை மட்டக்களப்பு ஹெரிடேஜ் ரோட்டரி கழகத்தினர், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ரோட்டரி கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







