2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மனைப்பொருளியல் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை குறித்து வெளியான செய்தி!

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மனைப்பொருளியல் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை, நாடு முழுவதும் உள்ள 44 பரீட்சை நிலையங்களில் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் செயன்முறைப் பரீட்சை எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கே நடத்தப்படவுள்ளது என அத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடுதனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள், விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

அனுமதி அட்டை கிடைக்காத பரீட்சார்த்திகள் இம் மாதம் 7ஆம் திகதி முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தங்களது அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, பரீட்சார்த்திகள் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011 2784208, 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects