உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை இன்று (07.10.2026) 101.51 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது 0.92% அதிகரிப்பு என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, WTI மசகு எண்ணெயின் விலையும் 0.92% அதிகரித்து, ஒரு பீப்பாய் 90.25 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் புயல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects