இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (NCEL) மற்றும் இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் (COOPFED) ஆகியவற்றுக்கு இடையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 05.10.2026 அன்று கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் அனுபம் கௌஷிக், COOPFED சார்பில் அதன் தலைவர் கலாநிதி சாந்த ஜயரத்ன ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதனுடன் இணைந்ததாக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) புதுப்பித்தல் உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் வாணிபம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்பினருக்கும் இடையில் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









