மண்முனை தென் எருவில்பற்று செயலகத்தின் இரத்ததான நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வானது தொடர்ச்சியாக இவ்வருடமும் 9வது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த இரத்ததான நிகழ்வானது 05.10.2026 அன்று பிரதேச செயலாளர் உ.உதயஶ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், கணக்காளரும் நலன்புரிச்சங்க தலைவருமான வ.நாகேஸ்வரனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் இணைந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects