“யுனெஸ்கோ” அமைப்பின் சிபாரிசுக்கமைய ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக ஆசிரியர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
எனினும், இலங்கையில் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அடித்தளமாகவும், எதிர்கால தலைமுறையை உருவாக்குபவராகவும் திகழ்கிறார்.
அறிவு, திறன் மற்றும் நல்ல மனப்பாங்குடன், சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஆற்றும் அளப்பரிய சேவையை வார்த்தைகளால் முழுமையாக எடுத்துரைக்க முடியாது.
அதேவேளை, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மாறிவரும் கல்வி முறைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களின் பங்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வளங்களின் குறைபாடு, தொழில்சார் பயிற்சி மற்றும் பணிச்சூழலில் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விடயங்களும், இந்த முறை உலக ஆசிரியர் தினத்தில் சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் விடயங்களாக உள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







