2026ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), பீட்டர் ஹெகேமன் (Peter Hegemann) மற்றும் ஜோர்ஜ் நாகல் (Georg Nagel) ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
ஹெகேமன் மற்றும் நாகல் ஆகிய இருவரும் தனித்துவமான பண்புகளைக் கொண்ட ‘சேனல்ரோடாப்சின்’ (channelrhodopsin) என்ற புரதத்தைக் கண்டுபிடித்தனர்.
இப்புரதத்தை எந்தவொரு செல்லுக்குள் செலுத்தினாலும், அச்செல்கள் ஒளியின் தாக்கம் பெறக்கூடியவையாக (light sensitive) மாறுவதை அவர்கள் கண்டறிந்தனர்.
கார்ல் டைசெரோத் இப்புரதத்திற்கான மரபணுவை எலிகளின் நரம்புச் செல்லுக்குள் செலுத்தினார். நீல நிற ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம், நரம்புச் சமிக்ஞையைத் தூண்ட அவரால் முடிந்தது.
பின்னர், வாழும் எலிகளின் மூளையில் நரம்புச் செல்களைக் கட்டுப்படுத்தும் இந்த ஒளி-கட்டுப்பாட்டு சுவிட்சை அவர் வெற்றிகரமாகச் செயல்பட வைத்தார்.
ஒளி மூலம் நரம்புச் சமிக்ஞைகளைக் கட்டுப்படுத்தும் இந்த முறை தற்போது ஒப்டோஜெனடிக்ஸ் (Optogenetics) என்று அழைக்கப்படுவதுடன், உலகளவில் விரைவான தாக்கத்தையும் பெற்றுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









