மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்ட புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு (Renal Care Unit) அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்க கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இச்சிறுநீரகப் பராமரிப்பு பிரிவின் ஊடாக, சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேலும் மேம்படுத்தி வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை வசதிகள் மற்றும் தனியான கட்டிட வசதி போதியளவில் இல்லாத காரணத்தால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சாலின்ட பண்டார, சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர்கள், உயர் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறந்த முறையில் சேவையாற்றிய உத்தியோகத்தர்களுக்கான கௌரவம் வழங்கப்பட்டது.

போதனா வைத்திய சாலைக்கு எதிர்வரும் வருடம் பல மில்லியன் பெறுமதியிலான மகப்பெற்று சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் வைத்திய சாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன் போது உறுதியளித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects